சென்ற சில தினங்களாகவே வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் சூழ்நிலையில், கனமழை மிகவும் கடுமையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது.
அந்த விதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வட மாநிலங்களில் கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன் அடிப்படையில், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட் பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் வரும் 19ஆம் தேதி வரையில் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.