தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால், கடந்த 10 தினங்களுக்கு முன்பு கனமழைக்கான வாய்ப்பு இருந்தது. அதன்படி, மார்ச் 11ஆம் தேதி வரை தூத்துக்குடி நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், மதுரை, தேனி மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும், தமிழ்நாட்டில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நாளை (மார்ச் 22) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.