fbpx

எச்சரிக்கை!… பிரதமர் மோடி படம் இல்லாவிட்டால் நிதியுதவியை நிறுத்துவோம்!… மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதிரடி!

மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்துவோம் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் தாங்களே செய்ததை போன்று விளம்பரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசின் ஒத்துழைப்பு உள்ள ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும்.

அப்படி பிரதமர் மோடியின் படம் இல்லையென்றால் நிதியுதவியை நிறுத்துவோம், என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் மாநில மக்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு ஏமாற்றும்? என்று கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மாநிலத்தின் பெரும்பாலான வளர்ச்சி மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.

Kokila

Next Post

அசத்தல்...! 2004-ம் ஆண்டு பிறகு பணி அமர்த்தப்பட்ட அனைத்து ஊழியர்களும் உத்திரவாத ஓய்வூதிய திட்டம்...!

Wed Oct 25 , 2023
பல மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தி தேசிய ஓய்வூதிய முறையை நிறுத்திவிட்டன. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியருக்கு ஓய்வூதியத் தொகை முழுவதும் ஓய்வுக்குப் பிறகு அரசால் வழங்கப்படும். பணிபுரியும் காலத்தில் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஓய்வூதியத் தொகை கழிக்கப்படுவதில்லை.இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் […]

You May Like