தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை மாதம் ராமநாதபுரத்தில் தொடங்கிய இவரது பயணத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று, மோடி அரசின் 10 ஆண்டுகால சாதனையைப் பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலையின் யாத்திரை நிறைவு பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் […]

பாரதிய ஜனதா கட்சியின் மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பல வெளிநாடுகளில் இருந்து அழைப்பு வந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பதை உலக நாடுகளே தெரிந்து வைத்திருக்கின்றன என பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய அவர், முதல்முறையாக பிரதமராக […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி போட்டியிட இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி வர இருக்கின்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. மேலும் பாரதிய ஜனதா […]

PM Vishwakarma Scheme: விஸ்வகர்மா திட்டம் என்பது மத்திய அரசால் செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களுக்கு விரிவான உதவிகளை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினை கலைஞர்களின் இந்து கடவுளான விஸ்வகர்மாவின் நினைவாக இந்த திட்டம் பெயரிடப்பட்டது. செப்டம்பர் 17, 2023 அன்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தால் (MSME) தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், […]

2019 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அந்தக் கட்சியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரை குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த உரை தொடர்பான […]

ஒரே குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் சவுதி அரேபியாவில் முடியாட்சி ஆட்சி இன்னும் தொடர்கிறது. மன்னராட்சியில் ஒரு நாட்டின் பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். எல்லா இடங்களிலும் அரசர்களின் ஆதிக்கம் இருந்த காலம். இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் முடியாட்சி முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் சில நாடுகளில் முடியாட்சி ஆட்சி தொடர்கிறது. இன்றும் முடியாட்சி தொடரும் சவுதி அரேபியா பற்றி தெரிந்துகொள்வோம். எந்த […]

வங்கதேசத்தில் 5ம் முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா, உலகில் நீண்டகாலமாக பதவி வகிக்கும் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். வங்கதேசத்தின் 12-வது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். 2009 முதல் தோல்வியே கண்டிராத ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். வங்க தேசத்தில் அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஷேக் ஹசீனாவின் […]

மாலத்தீவு நாட்டைச் சார்ந்த அமைச்சர்கள் பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் அமைச்சர்களின் பேச்சுக்கு மாலத்தீவு ஜனாதிபதி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் அதிபர் சமூக வலைதளம் மூலமாக கோரிக்கை விடுத்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை மாலத்தீவு நாட்டின் அதிபராக இருந்தவர் முகமது நசீத். 2012 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்களால் […]

திமுக மகளிர் அணி சார்பாக கலைஞர் 100 வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வைத்து நடைபெற்றது. இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி கருணாநிதி தமிழகத்தின் எதிர்காலம் திராவிட சிந்தனை உள்ள இந்த குழந்தைகளின் கைகளில் இருப்பதே […]

மத்திய அரசு வழங்கும் ஒவ்வொரு திட்டத்திலும் பிரதமர் மோடியின் படம் இடம்பெறவேண்டும் என்றும் இல்லாவிட்டால் நிதியுதவி நிறுத்துவோம் என்றும் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி அளித்தால், அதை ஆந்திராவில் உள்ள ஜெகன்மோகன் அரசு பயன்படுத்திக்கொண்டு, அனைத்தையும் தாங்களே செய்ததை போன்று விளம்பரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மத்திய அரசின் ஒத்துழைப்பு […]