fbpx

எச்சரிக்கை!… 3ம் உலகப் போர் தொடங்கினால்!… அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ளும் UK நகரங்கள்!

UK: ஈரான் – இஸ்ரேல் போரால் 3ம் உலகப் போர்ட் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அணு ஆயுத தாக்குல் நடந்தால் இங்கிலாந்தில் குண்டுவெடிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நகரங்கள் அடங்கிய பட்டியலை அந்நாட்டு அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்க்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்ததுடன், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட இந்த ஆயுதங்களில் கிட்டத்தட்ட அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஏவிய ட்ரோன்கள், ஏவுகணைகளை 99 சதவீதம் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. சுமார் 170 ட்ரோன்கள், 30 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஈரானால் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது . ஈரான் – இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், 3ம் உலகப் போர்ட் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் உலக நாடுகளிடையே அச்சத்தை அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், 3ம் உலகப் போர் தொடங்கி அணு ஆயுத தாக்குல் நடந்தால் இங்கிலாந்தில் குண்டுவெடிப்புக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள நகரங்கள் அடங்கிய பட்டியலை அந்நாட்டு அதிகாரிகள் தயாரித்துள்ளனர். அதில், பனிப்போர் காலத்தின் அடிப்படையில் பாதிப்புக்குள்ளாகும் நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதாவது, 1970களின் வரைபடத்தில் 20க்கும் மேற்பட்ட நகரங்கள் இங்கிலாந்து அதிகாரிகள், அணுகுண்டு தாக்குதலின் சாத்தியமான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அறிக்கைகளின்படி, மான்செஸ்டர், லிவர்பூல், எடின்பர்க், மற்றும் கேம்ப்ரிட்ஜ் போன்ற பல முக்கிய நகரங்கள் பாதிக்கப்படும் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வரைபடம் 23 RAF தளங்கள், 14 USAF தளங்கள், 10 ரேடார் நிலையங்கள், 8ராணுவ மையங்கள்,13 கடற்படை தளங்கள் போன்றவை அணுசக்தி தாக்குதல்களின் சாத்தியமான இலக்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது இந்த பகுதிகள் மக்கள் தொகை அடர்த்தியின் அடிப்படையில் அதிகம் என்பதால், அதிகபட்ச உயிரிழப்பு ,அற்றும் சேதங்களுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிடப்படுகிறது

Readmore: ஐஸ்கிரீம் எச்சரிக்கை!… தொண்டை வலி வந்தால் அலட்சியம் வேண்டாம்!… இந்த காய்ச்சல் அபாயம்!

Kokila

Next Post

இளைஞர்களே..!! நல்ல சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tue Apr 16 , 2024
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Technical Solution Manager பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 29.04.2024 அன்று வரை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள், உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனம் – டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் பணியின் பெயர் – Technical Solution Manager பணியிடங்கள் – 03 […]

You May Like