மின் இணைப்பு என்னுடன் ஆதார் இணைக்கும் பனி தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வருகிறது, இதுவரை 1.36 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு உள்ள 2.67 கோடி பேரில் 50 விழுக்காட்டிற்கும் மேல் தற்போது ஆதாரை இணைத்துள்ளனர். 31-ம் தேதி வரை எவ்வளவு பேர் முழுவதுமாக இணைத்துள்ளனர் என்ற கணக்கீடு வந்த பிறகு காலா வகாசம் நீட்டிக்கப்படுமா என்று முடிவெடுக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு மின்வாரிய சார்பில் ஒரு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதில் “நுகர்வோர் கவனத்திற்கு, இந்த போலியான SMS பரவி வருகிறது. இது போன்ற SMS ஒருபோதும் எங்களிடமிருந்து வராது. இதை பொருட்படுத்தாதீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் “உங்களுடைய EB பில் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை, அதை உடனே செலுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் மின்சார இணைப்பு இன்றிரவு 10.3 0மணிக்கு துண்டிக்கப்படும், மேலும் விவரங்களுக்கு 06201314601 என்ற மின்வாரிய அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளவும் என்று SMS உடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பை மட்டும் கிளிக் செய்துவிடாதீர்கள். இது ஒரு புதிய நூதனமுறை மோசடியாகும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்த மின் கட்டண SMS மோசடி, கடந்த பல மாதங்களாக நடந்து வரும் நிலையில், பல பயனர்களின் வங்கிக் கணக்குகளை மோசடி செய்பவர்கள் காலி செய்து வருகின்றனர். என்று மின்துறைக்கு புகார் வந்த நிலையில் இந்த அறைவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது போல SMS வந்தால் அதை கண்டுகொள்ள வேண்டாம், அதையும் மீறி உங்களுக்கு பதட்டம் இருந்தால் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொள்ளவதன் மூலம் இந்த மோசடியை தவிர்க்கலாம்.