தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுகளில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையடைவதில்லை. அதன்படி, தக்காளியில் பல அற்புத நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இதனை எடுத்துக் கொள்வதால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளியில் உள்ள லைகோபென் சருமத்தில் நிறமாற்றத்தை ஏற்படுத்தி விடும். தக்காளியில் உள்ள ஆசிட் சிறுநீர்ப்பையில் தொற்றை ஏற்படுத்தி விடும். தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், தக்காளியில் அல்கலாய்டு அதிகம் உள்ளது. இவை உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தி, எலும்புகளில் தேய்மானம் மற்றும் வலியை உண்டாக்கிவிடும்.
அதிக அளவு தக்காளி சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கும். இதற்குக் காரணம் தக்காளியில் கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் அதிகம் இருப்பதால், இவற்றை உடல் வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு, உடலில் படியத் தொடங்கி, சிறுநீரக கற்களாக மாற்றம் பெறுகின்றன. லைகோபீன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தீமை உண்டாகிறது. லைகோபீனோடேர்மியா மற்றும் சரும நிறமாற்றம் ஆகியவை உண்டாகின்றன. பொதுவாக லைகோபீன் உடலுக்கு நன்மை செய்கிறது. ஆனால், அதிக அளவு லைகோபீன் தீங்கு விளைவிக்கிறது. ஒரு நாளில் 22 மிகி அளவு லைகோபீன் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் இரண்டு ஸ்பூன் தக்காளி ப்யுரீயில் 27மிகி அளவு உள்ளது. அதிக அளவு தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வதால், வயிற்றுப்போக்கு உண்டாகலாம்.
தக்காளியில் மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. ஆகவே இதனை அதிகமாக உட்கொள்வதால், வயிற்றில் அதிக அமில சுரப்பு ஏற்பட்டு, நெஞ்செரிச்சல் மற்றும் எதுக்கலித்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமான தொந்தரவு, இரைப்பை குடல் அழற்சி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அதிக தக்காளி சேர்த்துக் கொள்வது தவிர்க்க பட வேண்டியதாகும். ஒற்றைத் தலைவலி பிரச்சனையை உண்டாக்கும். எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.