fbpx

எச்சரிக்கை!… இந்த நோய்கள் உள்ளவர்களுக்கு கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம்!… சிகிச்சை முறைகள் இதோ!

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு விழித்திரை நோயால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும். இதன் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களின் ஆலோசனையை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) என்பது நீரிழிவினால் வரும் சிக்கல்களினால் உண்டான விழித்திரையைப் பாதிக்கும் விழித்திரை நோயைக் குறிக்கும். இந்நோய், முடிவில் குருட்டுத் தன்மையை உருவாக்கும் தன்மையுள்ளது. இந்த நிலை முக்கியமாக உயர் இரத்த சர்க்கரை அளவு விழித்திரைக்கு இரத்தத்தை வழங்கும் சிறிய இரத்த நாளங்களின் வலையமைப்பை சேதப்படுத்துவதால் ஏற்படுகிறது.

Type 1 அல்லது Type 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் நீரிழிவு விழித்திரை நோயால் அதிகம் பாதிக்கப்படுவர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை இயல்பான நிலையில் இருக்கும் சிலருக்கும் இந்த நோய் ஏற்படலாம். எனவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளும் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதிக்க வேண்டும்.

இந்த நோயின் ஆரம்ப நிலையில் எந்தவித அறிகுறியும் இருக்காது. சர்க்கரை நோயாளிகள், கண்களைப் பரிசோதிக்கும்போதுதான் கண்டறிய முடியும். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் பின்வரும் சில அறிகுறிகளை உணர முடியும். அவை, படிப்படியான பார்வையிழப்பு, திடீர் பார்வையிழப்பு, மங்கலான பார்வை, கண் வலி அல்லது கண் சிவப்பாக இருத்தல் உள்ளிட்டவைகள் இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட கண்ணின் நிலையைப் பொறுத்தது. விட்ரிக்டமி அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை, விழித்திரையில் செலுத்தப்படும் ஊசி மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலமும், உங்கள் இன்சுலின் மற்றும் நீரிழிவு மருந்துகளுக்கான மருத்துவரின் அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலமும் உங்கள் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்பில் வைத்திருப்பதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.

Kokila

Next Post

உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகள்!... ஆண்டு கட்டணம் ரூ. 1.34 கோடி!... முழு பட்டியல் இதோ!

Wed Mar 1 , 2023
சுவிட்சர்லாந்தில் கல்லூரி ஆல்பின் பியூ சோலைல் என்ற பள்ளியில் ஆண்டு கட்டணமாக ரூ.1.34 கோடி வசூலிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படிம் உலகின் மிக விலையுயர்ந்த பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் கல்வி என்று வரும்போது, ​​நம் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியைக் கொடுக்க ஒவ்வொரு பெற்றோர்களும் முயற்சித்து வருகின்றனர். அதன்படி, தங்கள் குழந்தைகள் நல்ல பள்ளியில் படிக்க வேண்டும், அதனால் அவர்கள் சரியான கல்வியைப் பெறவும், […]

You May Like