fbpx

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை!! என்ன நடக்கும் தெரியுமா? கடுமையாக்கப்படும் சட்டம். !!

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படுகின்றது. ஆனால் அதையும் மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால், இதை தடுக்கும் பொருட்டு தற்போது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அபராத சீட்டு பெற்றுக் கொண்டு அபராதத் தொகையை செலுத்தாமல் வாகன ஓட்டிகள் டிமிக்கி கொடுக்கின்றனர். இதற்கு முடிவு கட்டுவதற்காகவே இந்த கடும் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போது விதித்துள்ள புதிய விதிமுறையின்படி 14 நாட்களுக்குள் அபாரதத் தொகையை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது. கடந்த பல மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நீதிமன்ற மூலம் நேரடியாக விதிக்கப்பட்ட அபராத தொகைக்கான ரசீதை பெற்று கொண்டு அபராத தொகையை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அபராத தொகை செலுத்தவர்களுக்கு காவல்துறை அழைப்பு மையங்கள் மூலம் கால் செய்து பலமுறை நினைவூட்டியும் அபராத தொகையை செலுத்தவில்லை. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே சென்னை போக்குவரத்து காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் இந்த வருட ஜனவரி மதம் முதல் ஜூன் மாதம் வரை குடித்துவிட்டு வாகனம் ஒட்டியவர்களில் யார் மீது வழக்கு உள்ளது மற்றும் யாரெல்லாம் அபராத தொகையை செலுத்தவில்லையோ அவர்கள் மீது நீதிமன்றம் மூலம் வாரண்ட் பிறப்பிக்கப்படும். அந்த வாரண்டை பெற்ற அவர்கள் அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். அவ்வாறு அபராத தொகை செலுத்தவில்லை என்றால் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என்று போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   

Next Post

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தமிழகத்திற்கு இரண்டு தங்கங்கள்…!!

Thu Nov 3 , 2022
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஆடவர், பெண்கள் பிரிவில் தங்கம் உறுதியாகி உள்ளது. ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9-வது சுற்றில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் ஆர்.பிக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். இதையடுத்து அவருக்கு தங்கம் உறுதியாகி உள்ளது. இதே போல பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை நந்திதா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 9 சுற்றுகள் கொண்ட சாம்பியன்ஷிப் தொடரில் […]

You May Like