fbpx

கோவை மக்களுக்கு எச்சரிக்கை..!! நிலைமை சரியில்ல..!! மாஸ்க் கட்டாயம்..!! வெளியான அறிவிப்பு..!!

கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்காக ஒரு நாளைக்கு உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையானது 50-ஆக இருந்த நிலையில், தற்போது 100 வரை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம், பண்டிகை காலத்தை முன்னிட்டு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கு மக்கள் சென்று வந்ததே ஃப்ளூ வைரஸ் பரவ காரணமாகும். குழந்தைகள், முதியவர்கள் மத்தியில் இந்த வைரஸ் விரைவாக பரவி வருகிறது.

சுவாசக் குழாய் மூலமாகத்தான் இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும்போதும், தும்மும்போது மற்றவருக்கு வைரஸ் பரவுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி, தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இது நீடிக்கும்போது இருமல் வரும். பொதுவாக 7 நாட்களில் இந்த பாதிப்பு தானாகவே சரியாகிவிடும். ஆகையால், பொதுமக்கள் மருந்து கடைகளில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்ள வேண்டாம். மருத்துவரின் ஆலோசனைகளை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவை மாவட்டத்தில் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் முடிந்தவரை கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெளியே சென்று வந்த பிறகு கை, கால்களை சோப்பு போட்டு கழுவிய பிறகே வீட்டிற்குள் செல்ல வேண்டும். வைட்டமின் சி, புரத சத்து மிகுந்த உணவு வகைகளை சாப்பிட வேண்டும். உடலுக்கு கட்டாயம் ஓய்வு தேவை.

Chella

Next Post

செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்..!! பக்கவாத அபாயம்..!! இன்று தான் கடைசி..!! பரபரப்பு

Wed Nov 22 , 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது. அவருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் 3,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரது ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்த நிலையில், சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் கடந்த […]

You May Like