fbpx

தண்ணீர் பாட்டில்களில், டாய்லெட் சீட்டை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளன.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

கொரோனா பரவலுக்கு பிறகு, அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் மூலம் கைகளை கழுவுவது, மாஸ்க் அணிவது போன்ற சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் புதிய ஆய்வில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது… அமெரிக்காவை தளமாகக் கொண்ட waterfilterguru.com என்ற இணையதளத்தின் சமீபத்திய ஆய்வின்படி, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்கள், கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாவை கொண்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது..

4 வகையான தண்ணீர் பாட்டில்களை 3 முறை ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில், பேசிலஸ் (bacillus) மற்றும் கிராம்-நெகட்டிவ் ராட் (gram-negative rods) என்ற 2 வெவ்வேறு வகையான பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.. இதில் கிராம்-நெகட்டிவ் ராட் பாக்டீரியா மூலம், நிமோனியா போன்ற பல தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே போல, சில வகையான பேசிலஸ் பாக்டீரியா, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் கோளாறுகளுக்கும் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. தண்ணீர் பாட்டில்களில் இருக்கும் பாக்டீரியாக்களை எண்ணிக்கையை கணக்கிட காலனி-உருவாக்கும் அலகுகள் (CFUs) பயன்படுத்தப்பட்டது..

அதில் ஒரு தண்ணீர் பாட்டிலில் 30 மில்லியன் CFUகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரு சராசரி கழிப்பறை இருக்கையில் 515 CFUகள் மட்டுமே உள்ளது. அதாவது கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியாவை தன்ணீர் பாட்டில்களில் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.. மேலும் தண்ணீர் பாட்டில்களின் சுகாதாரத்தை மற்ற அன்றாடப் பொருட்களுடன் ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்தனர்.. அதில் செல்லப்பிராணியின் தண்ணீர் பாத்திரத்தை விட 14 மடங்கு அதிகமான தொற்றுக் கூறுகள் இருப்பதாகவும், சமையலறை சிங்க்-ஐவிட இரண்டு மடங்கு அதிகமான தொற்றுநோய்கள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிப்பதா? நுண்ணுயிரியல் பல்கலைக்கழக டாக்டர் சைமன் கிளார்க் இதுகுறித்து பேசிய போது ” பாக்டீரியாவின் அதிக வளர்ச்சிக்கு பாட்டில்கள் வளரும் இடமாக இருந்தாலும்.. அவை எப்போதும் தீங்கு விளைவிப்பதில்லை.. தண்ணீர் பாட்டில்களில் உள்ள பெரும்பாலான கிருமிகள் ஏற்கனவே மனித வாயில் இருப்பதால், அதைக் குடித்த பிறகு எந்த ஒரு நபரும் நோய்வாய்ப்பட்டதாக இதுவரை எந்த பாதிப்பும் பதிவாகவில்லை..” என்று தெரிவித்தார்..

எனினும், வாரத்திற்கு ஒரு முறையாவது தண்ணீர் பாட்டிலை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் சூடான அல்லது சோப்பு நீரில் கழுவ வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Maha

Next Post

குற்றவியல் சட்டத்தில் திருத்தம்...! மத்திய எடுத்த அதிரடி நடவடிக்கை...! ஆலோசனை வரவேற்பு...

Thu Mar 16 , 2023
நாட்டின் குற்றவியல் நீதிமுறையை விரிவாக ஆய்வு செய்வது தேவை என மத்திய உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு அதன் 146-வது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவின் 111-வது, 128-வது அறிக்கைகளும் அளித்துள்ளன. மக்களை மையப்படுத்திய சட்டக்கட்டமைப்பை உருவாக்கவும், அனைவருக்கும் நியாயமான, விரைவான நீதி கிடைக்கச் செய்வதற்கும் நாட்டின் குற்றவியல் சட்டங்களில் ஒருங்கிணைந்த மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், பங்குதாரர்கள் அனைவருடனும் கலந்தாலோசித்து இந்தியத் தண்டனைச் […]
டெண்டர் முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன எஸ்.பி.வேலுமணி..!

You May Like