fbpx

”தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது”..!! ஒரே போடாக போட்ட சித்தராமையா..!!

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா – தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனை தீவிரமாகி வருகிறது. கர்நாடகா உரிய நீரை வழங்காததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கையையும் வைத்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது எனவும் சித்தராமையா கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனு தாக்கல் செய்வோம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

உங்க அக்கவுண்டுக்கு 1 ரூபாய் வந்துருச்சா..? அப்படினா கவலைப்படாதீங்க..!! உங்களுக்கெல்லாம் ரூ.1,000 கன்பார்ம்..!!

Wed Sep 13 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடைசி கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. அதாவது, இந்த மகளிர் உரிமைத்திட்டத்தில் இணைய மாநிலம் முழுவதும் 1 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது வீடுகளுக்கு நேரடியாகவே சென்று […]

You May Like