fbpx

சற்றுமுன்…! வயநாடு நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 358 ஆக உயர்வு…! 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை…!

வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 3 கிராமங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த பயங்கர நிலச்சரிவால் வீடுகள் மண்ணில் புதைந்து 358 பேர் உயிரிழந்துவிட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்று கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

தெர்மல் ஸ்கேனர் மட்டுமன்றி, ட்ரோனில்ரேடார் பொருத்தி தேடும் பணியும் நடைபெறுகிறது. மீட்பு பணியில் மோப்ப நாய்களையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிலச்சரிவால் உருவான மண்மேடுகளில் யாராவது சிக்கி உள்ளனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் சுற்றி வருகின்றன. தன்னார்வலர்கள், பொதுமக்களும் இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. சாலியாற்றில் இருந்து மீட்கப்படும் சடலங்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

English Summary

Wayanad landslide… death toll rises to 358

Vignesh

Next Post

தமிழகமே ஷாக்!. விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட 9 பேர் பலி!. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த சோகம்!

Sun Aug 4 , 2024
Tamil Nadu is shocked! 9 people including 2 children died in accidents! Tragedy happened in the blink of an eye!

You May Like