fbpx

வயநாடு நிலச்சரிவு..!! பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காத ரஜினி..!! என்ன காரணம்..?

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், முண்டக்கை கிராமம் முழுவதுமாக அழிந்த நிலையில், சூரல்மலை கிராமம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்த நிலச்சரிவு, வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலரின் நிலை என்னவென்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கி உள்ளது. தேசிய பேரிடராக இந்த நிலச்சரிவை அறிவிக்க கேரளா அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், மத்திய அரசு இன்னும் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவுக்கு தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நிவாரண உதவி வழங்கி வருகின்றன. ஆனால், முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை. அவர் சார்பில் உதவி வழங்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இதனால், பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Read More : சைவ பிரியர்களே இதை நோட் பண்ணிக்கோங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

English Summary

வயநாடு நிவாரண நிதிக்கு முன்னணி நடிகரான ரஜினிகாந்த் இதுவரை எந்த உதவியையும் அறிவிக்கவில்லை.

Chella

Next Post

NEET PG 2024 | நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி..!! - உச்சநீதிமன்றம் அதிரடி

Fri Aug 9 , 2024
SC Refuses To Interfere With NEET PG 2024, Says 'Will Not Re-schedule Exam

You May Like