fbpx

’தமிழக ஆளுநரிடம் நாங்கள் மாட்டிக்கொண்டு முழிக்கிறோம்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் பரப்புரை..!!

புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல மத்திய பாஜக அரசு நடத்தி வருகிறது. இதற்கு புதுச்சேரி முதல்வரும் துணை போகிறார். மாநில உரிமை மட்டுமின்றி, யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இண்டியா கூட்டணி போராடுகிறது. கவர்னர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்சனைதான். தமிழக கவர்னரிடம் நாங்கள் மாட்டி முழித்துக் கொண்டிருக்கிறோம்.

காவல்துறையில் பதவிக் காலம் முடிந்ததும் அவர்களுக்கு கவர்னர் பதவி வழங்கி, பாஜகவின் ஏஜெண்டுகளாக மாற்றி, அவர்களை விளம்பரத்துக்காக பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா. அதனால் தான் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை. பிரதமர் மோடி மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி சமூகநீதி, இடஒதுக்கீடு குறித்து பேச மறுக்கிறார்.

சமூகநீதி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என பிரதமர் மோடி ஒருநாளும் சொல்லவில்லை. மக்களுக்காக ஆட்சி நடத்தாமல், கார்ப்பரேட்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார். ரங்கசாமியை டம்மியாக அமர வைத்துவிட்டு பா.ஜ.க. பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது. முதல்வர் ரங்கசாமி பா.ஜ.க.வின் கைக்கூலியாக செயல்படுகிறார். பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்று பேசினார்.

Read More : தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை என்ன..? பிரசாந்த் கிஷோர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!! அப்படினா திமுக, அதிமுக..?

Chella

Next Post

டெல்லி மதுபான கொள்கை ஊழல் : கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

Mon Apr 8 , 2024
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளும் அம்மாநில எம்.எல்.சி.யுமான கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது […]

You May Like