fbpx

”ஆதார் விவரங்களை இனி நம்மால் மாற்ற முடியாது”..!! UIDAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியுமா? என்ற சந்தேகம் பரவலாக உள்ள நிலையில், இதுகுறித்து இந்திய தனித்துவ ஆதார் அடையாள ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது.. அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது… ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன… முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.

இந்நிலையில், மத்திய ஆதார் ஆணையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையில் பெயர், வயது, முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கியுள்ளதாலும், அனைத்து வேலைகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுவதாலும், அதில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்று மத்திய ஆதார் ஆணையம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதில், ஏதேனும் விவரங்கள் மாற்றம் இருப்பின் ஆன்லைன் வாயிலாகவும் அரசின் இ- சேவை மையம் வாயிலாக உடனுக்குடன் அதனை அப்டேட் செய்து கொள்ள வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன..

இதில், விவரங்களை மாற்ற வேண்டும் என்றால், கட்டாயம் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் தேவை. இது இருந்தால் போதும், நீங்களாகவே வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே அப்டேட் செய்யலாம். மற்றொரு முக்கியமான தகவல் ஆதார் அட்டை பற்றி UIDAI வெளியிட்டுள்ளது. அதன்படி இனிமேல், ஆதாரில் பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களை தனிப்பட்ட முறையில் தானாக மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனை மாற்ற அரசு ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்ற முடியும் என்றும் UIDAI எனப்படும் மத்திய ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்க விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா……? அடேங்கப்பா……!

Wed Apr 19 , 2023
அமரர் கல்கி சோழ சாம்ராஜ்யம் பற்றி எழுதிய வரலாற்று புத்தகமான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 2 பாகங்களாக படம் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று டெல்லியில் […]

You May Like