கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த தொடங்கிய அந்த நிமிடம் முதலே தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
சற்றேற குறைய 17 மணி நேரம் நடைபெற்ற அந்த சோதனையின் முடிவில் புதன்கிழமை நள்ளிரவு 2 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையினரால் கைது செய்யப்படுவதற்கான ஆணையை அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழங்கினர். ஆனால் அவர் அந்த ஆணையைப் பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது.
பின்னர் அவரை கைது செய்த உடன் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக அவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு முன்னதாகவே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் வந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அதிகாரம் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம் மாநில உரிமைகளை நீக்க போராடுவோம் குறுக்கே வரும் தடைகளை தகர்த்து நம்முடைய பயணம் வெற்றி பயணமாக தொடர்ந்து கொண்டே இருக்கும். சரித்திரத்தில் நமக்கு கிடைக்கும் இடம் சலுகையால் பெறக்கூடியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.