தமிழ்நாடு அரசு தேவையற்ற தொல்லை தருவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, ”தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான நதிநீர் பிரச்சனையை தீர்க்க மேகதாது அணை கட்டுவதே தீர்வாக அமையும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் அணையை தமிழ்நாடு எதிர்க்க எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
வழக்கமாக தமிழ்நாட்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தரப்படுவதாகவும், மழை இல்லாத காலங்களில் குறைவான நீரே தரப்படுவதாகவும் கூறினார். காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு தேவையற்ற தொல்லை தருவதாக கூறிய முதல்வர் சித்தராமையா, தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் காவிரி நீரை தரவில்லை என்றும் கூறினார். கர்நாடக மக்களின் குடிநீர் தேவையே முதன்மையானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.