fbpx

’25 வருஷமா தொழில் பண்றோம்’..!! ’இதுவே முதல்முறை’..!! லட்டு விவகாரத்தில் பதறியடித்து விளக்கம் கொடுத்த நிறுவனம்..!!

திருப்பதி லட்டு தயாரிக்க சப்ளை செய்யப்பட்ட நெய்யில் மாட்டு கொழுப்பை கலந்தது திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

இதுகுறித்து லெனின் கூறுகையில், “தேவஸ்தானத்திற்கு ஜூன், ஜூலை என இரண்டு பாகங்கள் நெய் அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. தற்போது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது. அதில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை, அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கு என வெளிப்படுத்தும் பட்சத்தில் இருந்தால் எங்களது நெய் எல்லா இடத்திலும் உள்ளது. அதனை சோதனை செய்யலாம். அதன் தரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை. எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை செக் செய்து கொள்ளலாம்.

25 ஆண்டுகளுக்கும் மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இந்த மாதிரி எங்களது பொருட்களின் தரத்தை வெளிப்படுத்தியது கிடையாது. இது எங்களின் விளக்கம். எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஏ.ஆர். தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரி கண்ணன் கூறுகையில், “எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில், எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம்.

லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல பேர் நெய் அனுப்பி உள்ளனர். அதில் நாங்களும் ஒருவர். திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைகளும் இல்லை என வந்துள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர். அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை” என்றார்.

Read More : பிக்பாஸ் 8இல் நகைச்சுவை ஜாம்பவான்..!! அடடே இந்த நடிகையுமா..? ஆரம்பத்துலயே பஞ்சாயத்து வெடிக்கப் போகுது..!!

English Summary

Dindigul A.R. Dairy Company has been accused of mixing cow fat in ghee, the company has clarified.

Chella

Next Post

’அந்த பொண்ணுக்கு சொகுசா இருக்கணும்னு ஆசை’..!! குற்றத்தை நிரூபித்தால் ஜானியை விட்டு விலக தயார்..!!

Fri Sep 20 , 2024
Johnny Master's wife Sumalatha Samonsu has interviewed that she is ready to leave her husband if the sexual accusation against him is proved.

You May Like