சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்து விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில், வரப்போகும் தேர்தலுக்கு தேமுதிக சார்பாக எங்கள் பணிகளை இப்போதே தொடங்கியுள்ளோம். 234 தொகுதிகளிலும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை தொடங்குகிறோம். தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளில் அதிமுக நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் நட்புணர்வு தொடர்கிறது. எங்கள் ஒற்றுமை நல்லவிதமாக சிறப்பாக சென்று கொண்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பொழுது கொடுத்த வாக்குறுதிகள் இன்றளவும் நிறைவேற்றவில்லை. அதில் ஒரு பகுதியாக ஆசிரியர் பெருமக்கள் பல்வேறு போராட்டங்களில் நடத்தி வருகிறார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் போராட்டங்களை நடத்த வேண்டியதில்லை. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற தேர்தலில் என்ன நடந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டார் அந்த தொகுதி முடிவு தெரிவதற்கு முன்பாகவே அவர்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக முதலமைச்சரே சொன்னார்.
அதே போல் வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று மக்களை மூளை செலவை செய்கிறார்கள்.அவர்களுக்கு எந்த அளவிற்கு கான்ஃபிடன்ஸ் உள்ளதோ அதே அளவிற்கு எங்களுக்கு உள்ளது 200 அல்ல 230 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் அதற்கான வியூகம் கூட்டணி என்பதை அந்தந்த கால கட்டங்களில் அமைத்து அறிவிப்போம்.
திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளது இது 2026 ஆம் ஆண்டு வரை தொடருமா என்ற கேள்வி உள்ளது. இந்த திமுகவின் கூட்டணி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதயநிதி ஸ்டாலின் நேற்று கூட சொல்லி உள்ளார் எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது
Read more ; 2026-ல் பாமக கூட்டணி ஆட்சியில் பழைய ஓய்வூதியத் திட்டம்…! ராமதாஸ் வாக்குறுதி…!