fbpx

பிரக்யான் சிக்னலுக்காக அக்டோபர் 6 வரை காத்திருக்க வேண்டும்!… விஞ்ஞானிகள் தகவல்!

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சிக்னல் கிடைக்க அடுத்த சூரிய அஸ்தமனம் நிகழும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, கடந்த மாதம் 23-ந் தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் வெற்றி பயணத்தை முடித்து கொண்டு நிலவில் வெற்றிகரமாக மென்மையாக தரை இறங்கி ஆய்வுப்பணியில் ஈடுபட்டது.

அதன் மூலம் கிடைத்த பல்வேறு தரவுகள் மற்றும் புகைப்படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு ஒரு நிலவு நாள் முடிவடைந்து இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் சிவசக்தி புள்ளியில் பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவை 14 நாட்கள் உறக்க நிலையில் வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து அடுத்த 14 நாட்கள் நிலவில் இருள் நிலவிய நிலையில் தற்போது மீண்டும் பகல் காலம் வந்துவிட்டது. இந்த 14 நாட்கள் கடும் குளிரை எதிர்கொண்டு உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் மீண்டும் கடந்த 22ம் தேதி அதன் பணிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை பிரக்யான் ரோவரிடம் இருந்து எந்த தகவலும் பெறமுடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை புதுப்பிக்கும் முயற்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அக்டோபர் 6-ம் தேதி சந்திரன் மறையும் வரை தொடரும் என்று விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் சிக்னல் கிடைக்க அடுத்த சூரிய அஸ்தமனம் நிகழும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை காத்திருக்கவேண்டும். மேலும், கருவிகளுடனான தொடர்பு எப்போது மீண்டும் ஏற்படுத்தப்படும் என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்தார். “அது எப்போது எழும் என்று எங்களுக்குத் தெரியாது. அது நாளை இருக்கலாம், அல்லது சந்திர நாளின் இறுதி நாளாகவும் இருக்கலாம். ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம். லேண்டர் மற்றும் ரோவர் எழுந்தால் அது ஒரு பெரிய சாதனையாகும் என்று சோமநாத் கூறியுள்ளார்.

Kokila

Next Post

”அது மட்டும் நடந்துச்சுன்னா அண்ணாமலை தலைவராக இருக்க மாட்டார்”..!! அடித்து சொல்லும் எஸ்.வி.சேகர்..!!

Sun Sep 24 , 2023
அண்ணாமலைக்கு தனது பையன் வயது கூட கிடையாது, அவர் பின்னால் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு ஓட வேண்டிய அவசியம் தனக்கில்லை என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ஒரு பையன் தேர்வு எழுதுவதற்கு முன்பு நான் 100/100 வாங்கிவிடுவேன் என கூறுவான். ஆனால், கடைசியில் தேர்வு முடிவை பார்த்தால் தான் தெரியும் வெறும் இரண்டரை மார்க் மட்டுமே வாங்கியிருப்பான். அண்ணாமலை கதையும் அப்படித்தான். தேர்தல் முடிவுக்கு பிறகு […]

You May Like