fbpx

’ஸ்டாலின் கூறியதால் தான் வாக்களித்தோம்’..!! ’பஸ் ஸ்டாண்ட் நாறிப் போய் கிடக்கு’..!! ஆய்வின்போது அதிர்ச்சியான கார்த்தி சிதம்பரம்..!!

சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை பேருந்து நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்கு வந்த திமுக பிரமுகரான குமாரசாமி, ‘‘மு.க.ஸ்டாலின் கூறியதால் தான் உங்களுக்கு வாக்களித்தோம். ஆனால், சிவகங்கை வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கிறது. பேருந்து நிலையமே மிக மோசமாக இருப்பதை பாருங்கள்’’ என்றார். இதையடுத்து அருகில் இருந்த காங்கிரஸார் குமாரசாமியை சமரசம் செய்து, அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “சிவகங்கையில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும். புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவர்களையே நியமித்துள்ளனர். அதிலும் பழைய நபர்களே உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு முக்கியமில்லாத அமைச்சர் பதவிகளே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரச்சனையைத் தீர்க்கும் மனப்பான்மை அவர்களிடம் இல்லை. இதனால் ஏமாற்றம் தான் கிடைக்கும்” என்றார்.

Read More : தமிழக பாஜக யாருக்கு..? தமிழிசைக்கு மட்டுமல்ல அண்ணாமலைக்கும் செம டோஸ்..!! ஓரிரு நாளில் வெளியாகும் அறிவிப்பு..!!

English Summary

Karthi Chidambaram said that the bus stand will be upgraded with all facilities at Sivagangai.

Chella

Next Post

கணவர் வேறொரு நடிகையுடன் உடலுறவு..!! நேரில் பார்த்த காதல் மனைவி..!! பிரபல நடிகர் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Jun 13 , 2024
Kannada actor Yuvrajkumar has filed for divorce from his love wife Sridevi Bhairappa, alleging that she was harassing him.

You May Like