fbpx

மணிப்பூர் கலவரம் குறித்து இதுவரையில் எத்தனை எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது….? உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி……!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் தொடங்கிய கலவரம் இன்று முதல் தொடர்ந்து, நடைபெற்று வருகிறது. மேலும், இந்த கலவரத்தை ஒரு காரணமாக, வைத்துக்கொண்டு, பல்வேறு சட்டவிரோத செயல்களும், மனித உரிமை மீறல்களும் அந்த மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

அதோடு, கடந்த மே மாதம் 4ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பல்வேறு கண்டனங்களை பல அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட மணிப்பூர் பெண்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட், நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, ஜே பி பர்திவாலா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இது போன்ற கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் இன்று வரையிலும், புகார் வழங்காமல் இருக்கிறார்கள். மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தை மிகப்பெரிய கண்ணோட்டத்துடன் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு, மணிப்பூர் மாநிலத்தின் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைகள் தொடர்பாக இதுவரையில் எத்தனை முதல் தகவல் அறிக்கைகளை காவல்துறையினர் பதிவு செய்திருக்கிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட அந்த 2 பெண்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அத்துடன் எங்களுடைய அடையாளங்களை எந்த காரணத்திற்காகவும் வெளியிடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், என்று அவர்கள் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது பற்றி கருத்து தெரிவித்திருக்கின்ற மத்திய அரசு, இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்குமானால் அதற்கு எங்கள் தரப்பில் எந்த விதமான ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாது என்று கூறியுள்ளது. மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். ஆத்துடன் மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட அந்த 2 பெண்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கபில் சிபெல் ஆஜராகி வாதிட்டார்.

Next Post

தமிழக சுகாதாரத்துறையில் காலியாக இருக்கும் 1066 இடங்கள் விண்ணப்பம் செய்ய இன்று இறுதி நாள்…..! உடனே முந்துங்கள்……!

Mon Jul 31 , 2023
தமிழக சுகாதாரத்துறையில் அவ்வப்போது பல்வேறு காலி பணியிடங்கள் ஏற்படும்போது, அதனை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு, அதன் மூலமாக பல்வேறு வேலைவாய்ப்பற்றவர்கள் அரசு வேலையில் அமர்வார்கள். அந்த வகையில், தமிழகத்தில் தற்போது சுகாதாரத் துறையில் காலியாக இருக்கின்ற 1066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இருக்கின்ற சுமார் 1066 சுகாதார ஆய்வாளர் 2ம் நிலை […]

You May Like