fbpx

கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்!! காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!!

மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்று வரும் இந்த தேர்தல் 6 கட்டங்களை நிறைவு செய்திருக்கிறது. இறுதிக்கட்ட தேர்தல் வரும் இன்று(ஜூன் 1) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இறுதிக்கட்ட வாக்குப்பதிவானது 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் ஒடிசா மாநிலத்தின் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில்,வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக யாரும் பங்கேற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கேரா அறிவித்துள்ளார்.இது தொடர்பாக பவன் கேரா தனது எக்ஸ் தளத்தில், “வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர், அவர்கள் மூலம் தீர்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும். அதற்கு முன்பு, டிஆர்பிக்காக நடத்தப்படும் சண்டைகள் மற்றும் ஊக விவாதங்களில் ஈடுபட எந்த காரணமும் எங்களுக்கு தென்படவில்லை.வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு விவாதங்களில் மகிழ்ச்சியுடன் பங்கேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More: வாக்கு எண்ணிக்கை அன்று மோதல் நடக்க கூடாது…! தலைமை செயலாளர் உத்தரவு…!

Rupa

Next Post

வசமாக சிக்கிய VJ சித்து!! வைரலாகும் கார் வீடியோ!! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

Sat Jun 1 , 2024
பிரபல யூடியூபர் VJ சித்து மீது சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. VJ சித்து யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடையே நன்கு பிரபலமானார். தற்போது ‘VJ சித்து வி லாக்ஸ்’ என்ற யூடியூப் சேனல ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இவர் நடத்தும் ‘மொட்டை மாடி பார்டி’ எனும் நிகழ்ச்சியில் புதிதாக வெளியாகும் படங்களின் கதாநாயகர்களுடன் கலந்துரையாடல் எடுத்து […]

You May Like