fbpx

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு..! கைவிட்ட வருமான வரித்துறை..! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு கைவிடப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1996-97 ஆம் ஆண்டு வி.கே.சசிகலா செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு சசிகலா தரப்பில் 2001ஆம் ஆண்டு பதில் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த குறிப்பிட்ட ஆண்டில், சசிகலாவிடம் ரூ.4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதால், அவற்றுக்கு ரூ.10,13,271 செல்வ வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்ற வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்கு உட்பட்டு மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், ரூ.40 லட்சம் கடனை கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

சசிகலாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கு..! கைவிட்ட வருமான வரித்துறை..! உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!

இந்த உத்தரவை எதிர்த்து 2018ஆம் ஆண்டு வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.1 கோடிக்கும் குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என்று நேரடி வரிகள் வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், அதன் அடிப்படையில் சசிகலா மீதான செல்வ வரி வழக்கை கைவிடுவதாகவும், வழக்குகளை திரும்ப பெறுவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

மின்விசிறி கழன்று பெண்ணின் தலையில் விழுந்ததால்... திருத்தணி முருகன் கோவிலில் பரபரப்பு..

Thu Aug 4 , 2022
திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடாக திகழ்வது இத்திருத்தலமாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்ய வந்த வண்ணமிருப்பர். மேலும் மலைமேல் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணம், காதுக்குத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். இந்நிலையில் சென்னை ஆவடி அருகே உள்ள கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி லட்சுமி (40). […]

You May Like