fbpx

Wedding Proposal Gone Wrong..!! நிம்மதியா ஒரு ப்ரோப்போஸ் பண்ண விடுறாய்ங்களா..?? வைரல் வீடியோ

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் காதலர் தினத்தன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி, ஸே என்ற நபர் தனது நீண்ட நாள் தோழியான சாய் என்பவரிடம் தனது காதலை வெளிப்படுத்துவதற்காக சிட்னியில் உள்ள கூகி கடற்கரையில் மணலில் அசத்தலான ஏற்பாடுகளெல்லாம் செய்திருந்தார். இந்த செட் அப் கடற்கரையில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்ததால் அந்த இடத்தில் இருந்தவர்களெல்லாம் ஒன்று கூடி சாயிடம் எப்படி ப்ரோப்போஸ் செய்கிறார் என்பதை ஆவலோடு பார்த்திருந்திருக்கிறார்கள். இதையெல்லாம் கண்ட சாய்க்கு பெரும் ஆச்சர்யமே தொற்றியிருக்கிறது. அப்போது சாய் முன் மண்டியிட்ட ஸே ப்ரோப்போஸ் செய்ய அதற்கு சாயும் ஏற்றுக்கொள்ளவே ஆசையாசையாக வாங்கிய வைர மோதிரத்தை காதலிக்கு போட்டும் விடும் போது தவறுதலாக அது கடற்கரை மண்ணில் விழுந்துவிடுகிறது.

இது ஒட்டுமொத்த ஏற்பாட்டையும் குலைக்கும் வகையில் இருக்கவே சில நிமிடங்களுக்கு பதபதைத்து போகவே அங்கிருந்தவர்களின் உதவியோடு ஒரு வழியாக அந்த வைர மோதிரத்தை மீட்டெடுத்து ஒரு வழியாக சாயின் விரலில் போட்டுள்ளார் ஸே. இந்த நிகழ்வுகள் அனைத்தையும் கடற்கரையில் இருந்த பார்வையாளரில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட அது சிட்னி மக்களிடையே பெருமளவில் வைரலாகியிருக்கிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அந்த சாய், “என்னுடைய வருங்கால கணவனிடம் இருந்து ஒரு ப்ரோ டிப்ஸ் கொடுக்கிறேன். லூசாக இருக்கும் மோதிரத்தோடு மணலில் ப்ரோப்போஸ் செய்துவிடாதீர்கள். ஏனெனில் கடைசியில் நியூஸிலோ அல்லது டிக்-டாக்கிலோதான் வருவீர்கள்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/CooS1cbJ7A8/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை சீரழித்த இளைஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது…..!

Thu Feb 16 , 2023
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் இந்த குற்றங்கள் குறைந்த பாடில்லை. காவல்துறை என்ன தான் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், பெண்களிடம் இது குறித்து சரியான விழிப்புணர்வு இல்லாததால் தான் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் […]

You May Like