தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்களின் விவரங்களை அவசரமாக அனுப்பும்படி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கையில், பள்ளிக்கு வரமால் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பலர் இப்படி விடுமுறை எடுப்பது வழக்கம் ஆகி உள்ளது. பள்ளிகளுக்கு செல்லாமல் ஆசிரியர்கள் பலர் மெடிக்கல் லீவ் எடுக்கும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். உடல் நிலையை காரணம் காட்டி பலர் லாங் லீவ் எடுப்பதும் வழக்கம் ஆகி உள்ளது. மெடிக்கல் லீவ் எடுத்தாலும், எடுக்கவில்லை என்றாலும் சம்பளம் வந்துவிடும் என்பதால் இப்படி பல ஆசியர்கள் லீவ் எடுக்கின்றனர். சிலர் அரசு பள்ளிகளில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். தனியார் பள்ளிகளில் கூடுதல் சம்பளத்திற்கு இவர்கள் சில பீரியட்களை எடுப்பார்கள். மற்ற நாட்களில் மட்டும் அரசுப் பள்ளிகளுக்கு வருவதை சில ஆசிரியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் சார்பாக அடிக்கடி புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆசிரியர்கள் அடிக்கடி லீவ் எடுக்கிறார்கள். இதனால் மாணவர்களின் படிப்பு கெடுகிறது. சிலபஸ் முடிக்கப்படாமல் இருக்கிறது. இந்த வருடம் தேர்வு வர போகிறது. ஆனால், இன்னும் சில பள்ளிகளில் சிலபஸ் முடிக்கப்படவில்லை. அதனால் விரைவில் அடிக்கடி லீவ் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே பள்ளிக்கு வரமால் அடிக்கடி விடுப்பு எடுக்கும், நீண்ட நாட்கள் விடுக்கும் ஆசிரியர்கள் விவரங்களை அவசரமாக லிஸ்ட் எடுத்து அனுப்ப கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்த லிஸ்டை வைத்து ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் அந்த ஆசிரியர்கள் வருமானத்தில் குறைப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.