fbpx

“அலப்பறை கிளப்புறோம்…” பிரமாண்டமாக தொடங்கிய ஜெயிலர் 2 படப்பிடிப்பு…!

மிகப்பெரிய வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படம், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் 2023ஆம் ஆண்டு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்திற்குக் கிடைத்த அபார வரவேற்பினால், படக்குழு இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில், ஜெயிலர் 2 என பெயரிடப்பட்ட புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை உருவாக்கியது.

இந்நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று (மார்ச் 10) பூஜையுடன் தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “முத்துவேல் பாண்டியன் வேட்டை தொடங்குகிறது; ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியது” எனக் குறிப்பிடப்பட்டு, அதற்கான போஸ்டரும் பகிரப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கான செட் அமைப்புப் பணிகள் சில காலமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போதும் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக, ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் காட்சிகள் 15 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஜெயிலர் முதல் பாகத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் ஜெயிலர் 2 படத்திலும் பங்கேற்கவுள்ளனர் என கூறப்படுகிறது.

Read More: கண்ணப்பா படத்தில் பிரபாஸ் சம்பளமே வாங்காமல் நடித்தாரா..? உண்மையை உடைத்த பிரபல நடிகர்..

English Summary

The shooting of Jailer 2 has begun in a grand manner…!

Kathir

Next Post

’என் புருஷனை விட உன் மேல தாண்டா ஆசையா இருக்கு’..!! உருகி உருகி காதலித்துவிட்டு உதறி தள்ளிய பெண்..!! கள்ளக்காதலனால் காட்டுக்குள் அரங்கேறிய பயங்கரம்..!!

Mon Mar 10 , 2025
Selvarani's body, which was found decomposed in the forest, was recovered and sent to the government hospital for an autopsy.

You May Like