fbpx

#WeWantGroup4Results..!! குரூப் 4 ரிசல்ட் என்ன ஆச்சு ஆபிசர்ஸ்..? ட்விட்டரில் ட்ரெண்டிங்..!! தெறிக்கவிடும் தேர்வர்கள்..!!

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. டிஎன்பிஎஸ்பி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழகம் முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி-யின் செயல்பாடு சமீபகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு வினாத்தாளில் பதிவெண்களால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பல மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கின. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறியும் டிஎன்பிஎஸ்சி அமைதி காத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. ஜூலை மாதம் 24ஆம் தேதி தேர்வர்கள் தேர்வு எழுதினர். மொத்தம் 18 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது 7 மாதங்கள் கடந்தும் இன்னும் குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடாமல் உள்ளது. இந்த விஷயத்தில் டிஎன்பிஎஸ்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று ட்விட்டரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.

அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என தேர்வர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை அவர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுகின்றனர். இதனால் #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சியை விமர்சித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் நிலையை எடுத்து கூறும் வகையிலும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Chella

Next Post

’புஷ்பா 2’ படத்தில் இணைந்த நடிகை சாய் பல்லவி..!! என்ன கதாபாத்திரம் தெரியுமா..?

Wed Mar 8 , 2023
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர், நடிப்பில் கடந்த ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2-வில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகை சாய் […]

You May Like