fbpx

என்ன அழகு!. எத்தனை அழகு!. உலகின் மிக அழகான பெண் இவர்தான்!. 3 லட்சம் வாக்குகள் பெற்று மகுடம் சூடினார்!.

Jisoo: தென் கொரிய நடிகையும், பாடகியுமான கிம் ஜிசூ (Jisoo) உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.

உலகின் மிக அழகான பெண் யார்?’ என்ற உலகளாவிய கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகியிருக்கிறது. கடந்த ஐந்து மாதத்துக்கு முன்பு Nubia இதழால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, அக்டோபர் 31, 2024 அன்று முடிவடைந்தது. அதன்படி, பல்வேறு பின்னணிகள் கொண்ட, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, 40-க்கும் மேற்பட்ட பெண் பிரபலங்கள் இந்தப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்தக் கருத்துக்கணிப்பில், உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள்.

126 நாடுகளிலிருந்து பங்கேற்ற ரசிகர்கள் மூலம் 9,00,000 வாக்குகள் பதிவாகின. அதாவது, மெக்சிகோ, சீனா, பெரு, கொலம்பியா, எகிப்து, அர்ஜெண்டினா, பிரேசில், அல்ஜீரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, ஸ்பெயின், கொரியா உள்ளிட்ட நாடுகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தப் போட்டியின் முடிவில், தென் கொரிய நடிகையும், பாடகியுமான கிம் ஜிசூ (Jisoo) உலகின் மிக அழகான பெண் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.

இவருக்கு 106 நாடுகளிலிருந்து 3,00,000-க்கும் அதிகமான வாக்குகள் வந்திருக்கிறது. தைவான் பாடகர் சௌ ட்சுயு இரண்டாவது இடத்தையும், தாய்லாந்து ராப் பாடகர், நடனக் கலைஞர் லலிசா மனோபன் மூன்றாவது இடத்தையும் பெற்றிருக்கிறார்கள். தென் கொரியப் பாடகியும், நடிகையுமான கிம் ஜிசூ, BLACKPINK எனும் பெண் பாடகர்கள் குழுவில் ஒருவர்.

2015-ல் நடிகையாக அறிமுகமான இவர், 2023-ல் அவரது தனி ஆல்பமான “மீ” ஆல்பத்தை வெளியிட்டார். இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது. ஜிசோ கோல்டன் டிஸ்க் விருதுகள், மமா விருதுகள் உட்படப் பல விருதுகளைப் பெற்று சிறந்த பாடகராகவும், நடிகையாகவும் வலம் வருகிறார். அவர் டியோருக்கான உலகளாவிய தூதராகவும் உள்ளார்.d

Readmore: இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்..! யார் இந்த “சஞ்சய் மல்ஹோத்ரா”..!

Kokila

Next Post

வாரம் ஒருமுறை இந்த கீரையை சாப்பிடுங்க..!! ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கு..!!

Tue Dec 10 , 2024
Farm-raised spinach, which is widely available in rural areas, is rich in beta-carotene.

You May Like