fbpx

என்ன மனுஷன்யா.! ரசிகரின் பைக்கை தொடைச்சு தோனி செய்த செயல்.! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.!

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என ஐசிசி யின் மிகப்பெரிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அடுத்து வர இருக்கின்ற ஐபிஎல் போட்டி தொடரிலும் தோனி விளையாடுவார் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகர் ஒருவரின் பைக்கை தனது டீ-சர்டால் மகேந்திர சிங் தோனி துடைப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தொடர்பான செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தோனியின் ரசிகரான ஸ்மித் குமார் பஜாஜ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு வீடியோவும் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த செய்தியில் பிரகாஷ் என்ற நபர் தோணியிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஆட்டோகிராப் வாங்குவதற்காக சென்றிருக்கிறார். அப்போது அந்த நபரின் ட்ரம்ப் ராக்கெட் 3 ஆர் பைக்கில் கையெழுத்து போடுவதற்கு முன்பு அதன் மாஸ்கை தனது டீ-சர்டால் சுத்தம் செய்துவிட்டு அதில் கையெழுத்திட்டு இருக்கிறார் மகேந்திர சிங் தோனி. அவரின் இந்த செயல்தான் தற்போது ரசிகர்களின் மனங்களை வென்றிருக்கிறது. தோனியும் ஒரு பைக் லவ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா?… இந்த செயலி மூலமும் செக் பண்ணலாம்!

Wed Nov 29 , 2023
உங்கள் பிஎஃப் பணத்தை EPFO ​​இல் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்கிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இல்லையெனில், உங்களுக்கு பின்னர் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா என்பதை எப்படி செக் செய்வது குறித்து இதில் பார்க்கலாம். நிறுவனம் உங்கள் கணக்கில் PF பணத்தை டெபாசிட் செய்கிறதா இல்லையா என்பதை அறிய, உங்கள் EPFO ​​பாஸ்புக்கை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஆனால், இதற்கு […]

You May Like