fbpx

’இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு’..!! ’அப்படினா அது பொய்யா’..? நாசா விஞ்ஞானிகளின் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!

இத்தனை காலமும், சூரியனை பூமி மிகத் துல்லியமான பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்ற தகவலில் தற்போது ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது, பூமி உண்மையிலேயே சூரியனை சுற்றவில்லையாம். இந்த மாற்றத்துக்குக் காரணம், நடுமையம். சூரியக் குடும்பத்தின் மொத்த அமைப்பை எடுத்துக் கொண்டால், அதனை ஒரு விளையாட்டு அரங்கம் போல உருவகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அப்படியானால், அந்த விளையாட்டு அரங்கில் இருக்கும் சூரியனும், பூமியும் ஒரே சமநிலையில், இரண்டுமே சுழற்சியில் இருக்கின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால், சூரியக் குடும்பத்தின் நடு மையம் என்பது சூரியனை மையமாகக் கொண்டதாக இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எதுவாகினும், நமது சூரியக் குடும்பத்தில், மிக வலுவான சாம்பியனாக இருப்பது சூரியன்தான். ஆனால், அதற்காக மட்டுமே அதனை நடுநாயகமாக அறிவித்து ராஜாவாக்க முடியாது.

சூரியனில் இருந்து வெளியாகும் நிறை, பூமியை அதன்பால் ஈர்க்கிறது. ஆனால், நியூட்டனின் உலக ஈர்ப்பு விசையின் விதிப்படி, சூரியக் குடும்பம் இரு இருவழிப் பாதை போலத்தான் செயல்படுகிறது. எனவே, பூமியும், ஒரு சிறிய வழியில் தனது புவி ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி சூரியனை லேசாக இழுக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசையுடன் ஒப்பிடுகையில், பூமியின் ஈர்ப்பு விசையானது குறைவுதான். நடு மையத்தை அது லேசாக அசைத்தாலும் கூட, சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியன் இருக்கிறது, ஆனால், எப்போதுமே அல்ல என்ற கூற்று எழுந்துள்ளது. இதுபோலவே மிகப்பெரிய கோள்களான ஜூபிடர் மற்றும் சனிக் கோளும் தங்களது ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி நடுநாயகமாக இருக்கும் சூரியனை அவ்வப்போது அதன் பவுண்டரியை விட்டு லேசாக அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறதாம்.

சூரியனின் அதிகப்படியான நிறை காரணமாக, அது நடு நாயகமாக சுற்றிக்கொண்டிருக்கிறது, எனவே, அதுவே மையப்புள்ளியாக இருக்காது. மற்ற பெரிய கோள்களின் ஆதிக்கத்தால், சூரியனே அதன் மையப் புள்ளியை விட்டு வெளியே வர நேர்கிறது. எனவே, பூமியின் வட்டப்பாதையானது மையத்தின் நிறையை பகிர்ந்துகொள்வதால் துல்லியமாக இருக்கிறதே தவிர, அது சூரியனைத்தான் சுற்றிவருகிறது என்று கூற முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஓ, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், கோள்கள், ‘தொழில்நுட்ப ரீதியாக’ சூரியனை மட்டும் சுற்றிவரவில்லை. ஏனெனில், அதன் ஈர்ப்பு விசையால்தான் இது நடக்கிறது. குறிப்பாக, ஜூபிடர் போன்ற கோள்கள், விண்வெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியை அடிப்படையாக வைத்தே சுற்றுகின்றன என்று பதிவிட்டுள்ளார். சூரியனின் மையப் பகுதியைத்தான் விண்வெளியில் கோள்கள் சுற்றி வருகின்றன என்றால், அது எப்போதாவது தான் நிகழ்கிறது. அதாவது, சூரியக் குடும்பத்தின் மையப் பகுதியாக சூரியனின் மையம், அதன் நிறையை அடிப்படையாக வைத்து எப்போதாவதுதான் இருக்கிறது என்கிறார் விஞ்ஞானி.

Read More : மக்களே பாதுகாப்பா இருங்க..!! நீலகிரி மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!!

English Summary

The earth does not really revolve around the sun. The reason for this change is moderation.

Chella

Next Post

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவரா நீங்கள்..? இவ்வளவு ஆபத்து இருக்கா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Wed Jul 17 , 2024
Doctors warn that skipping dinner to lose weight can lead to various health problems.

You May Like