அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொழிலதிபர் ரத்தன் டாடா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
* கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளையும் வழங்கிடும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க திமுக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு, போதை பொருட்கள் நடமாட்டம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வழிகாட்டி மதிப்பீடு உயர்வு ஆகிய உயர்வை கண்டித்து திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
* “ஃபார்முலா 4” கார் பந்தயம், பேனா சிலை வைப்பது, பூங்காக்கள் அமைப்பது என மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் என அதிமுக பொது குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக கபட நாடகம் ஆடுகிறது என கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* அதிமுக எம்.ஜி.ஆர். ஜானகி 100 ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* டங்ஸ்டன் தொழிற்சாலையை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும், தமிழ்நாட்டுக்கான நிதி பகிர்வை பாரபட்சம் இன்றி வழங்கிடவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
* திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திட மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
* சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து, ஆங்கிலத்தில் தொடர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
* வாக்காளர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றின் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதை சரி செய்திடவும், தேர்தல் நியாயமாக நடத்தப்படவும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி அதிமுக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக என தீர்மானத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் திட்டம், அணைகள், ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீரை சேமிக்கும் திட்டம் ஆகியவை நிறைவேற்றப்பட்டதை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* 2026-ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்குவோம் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
Read more ; ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும்..!! – தமிழக அரசு அறிவிப்பு