fbpx

மாரடைப்பு வரப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் 5 அறிகுறிகள் என்னென்ன?

மாரடைப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்த்தும் 5 அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்களுக்கு அதிக அழுத்தம், நெஞ்சை வைத்து யாரோ அழுத்துவது போன்ற உணர்வு, எரிச்சல், இறுக்கம், மார்பின் மையப்பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவற்றை நெஞ்செரிச்சல் அல்லது வாயுத் தொல்லை என கடந்து செல்கின்றனர். குறிப்பாக இதய நோயின் அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும்பாலான பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகும். பொதுவாக அதிக அழுத்தம், நெஞ்சை வைத்து யாரோ அழுத்துவது போன்ற உணர்வு, எரிச்சல், இறுக்கம், மார்பின் மையப்பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவற்றை நெஞ்செரிச்சல் அல்லது வாயுத் தொல்லை என மக்கள் எளிதாக கடந்து செல்கின்றனர். எனவே தான் மக்கள் தங்களது இதய ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும்.

வலி கைக்கு பரவுதல்:

மாரடைப்பு ஏற்படுவதற்கான மிகவும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று, தோள்பட்டையில் இருந்து உடலின் இடது கைக்கு வலி பரவுவதை உணர்வது ஆகும். இதுபோன்ற உணர்வை அனுபவித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தலைச்சுற்றல் மற்றும் மயக்கம்:

சாதாரண நபருக்கு திடீரென தலைச்சுற்றுவது அல்லது மயக்கம் வருவது போல் உணர்வு ஏற்படுவது ரத்தம் அழுத்தம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறியாகும். இது குறிப்பிட்ட நபரின் இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் தடுமாறுவதைக் குறிக்கிறது. இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை. நேரம் தாழ்த்தாமல், ஆம்புலன்சை வரவழைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல வேண்டும்.

தொண்டை அல்லது தாடை வலி:

தொண்டை அல்லது தாடை வலி இதயத்துடன் தொடர்புடையது அல்ல என்றாலும், மார்பிலிருந்து தொண்டை அல்லது தாடைக்கு பரவும் வலி அல்லது அழுத்தம் இதய பிரச்னையின் அறிகுறியாக மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.

அதிக வியர்வை:

ஓய்வாக அமர்ந்திருக்கும் போது அல்லது ரிலாக்ஸாக உறங்கிக்கொண்டிருக்கும் போது உடல் முழுவதும் குளிர்ச்சியான வியர்வை வெளியேறுவது மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறியாகும். எனவே திடீரென உடல் முழுவதும் வியர்த்து கொட்ட ஆரம்பித்தால் அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளைத் தவிர, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, வாந்தி, அஜீரணம், கால் வலி அல்லது கை வலி, கணுக்கால் வீக்கம், தீவிர சோர்வு ஆகியவையும் இதய ஆரோக்கியத்தைக் குறிக்கக்கூடிய முக்கிய அறிகுறிகள் ஆகும். அறிகுறிகள் ஏதுமின்றி கூட திடீரென மாரடைப்பு ஏற்படலாம் என்பதால் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவதும், சரியான நேரத்தில் பரிசோதனைகளைச் செய்து கொள்வதும் கட்டாயமாகும். குறிப்பாக ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, புகை மற்றும் மதுப் பழக்கத்தை கைவிடுதல் ஆகியவற்றை கடைபிடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

Read More: ஆந்திராவில் வெல்வாரா சந்திரபாபு நாயுடு ? – கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன!!

Rupa

Next Post

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்!… முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா மோதல்!

Sun Jun 2 , 2024
World Cup T20: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன. ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்றுமுதல் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், […]

You May Like