fbpx

ராணியின் உடல் இறுதிச்சடங்கில் என்னவெல்லாம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது மூப்பு காரணமாக ஸ்காட்லாந்தில் காலமானார். அங்கிருந்து லண்டன் வந்தடைந்துள்ள அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளது.

இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பங்கிங்காம் அரண்மனை ஊழியர்கள் செய்து வருகின்றார்கள்.

என்னென்ன முன்னேற்பாடுகள் : 1947ம் ஆண்டு இளவரசர் பிளிப்பை ராணி எலிசபெத் வின்ட்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். 18ம் நூற்றாண்டு முதல் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கு சேவை இதுவரை நடைபெறவில்லை. இருப்பினும் 2002ம் ஆண்டு ராணியின் தாயாருக்கு இறுதிச்சடங்கு இங்குதான் நடைபெற்றது.

ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப் பெட்டி வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலாயத்திற்கு ராயல் கடற்படையின் வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் பின்னர். புதிய மன்னர் , அரச குடுமபத்தின் மூத்த உறுப்பினரகள் , சர்வதேச தலைவர்கள் என அப்போது நடக்கும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலயத்தின் மதகுரு டேவிட் ஹோய்லே என்பவர் இந்த இறுதிச் சடங்குகளை நடத்துவார். பேராயர் ஜஸ்டீன் வெல்பே சமய சொற்பொழிவாற்றுவார்.

ராணி எலிசபெத்தின் உயில்..! 90 ஆண்டுகளுக்கு சீல்..! ஆச்சர்யமூட்டும் தகவல்கள்..!

இறுதிச் சடங்கில் புதியதாக தேர்வாகியுள்ள பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் பேச அழைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதையடுத்து ஊர்வம் நிறைவு பெற்றதும் வின்ஸ்ட்டர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலாயத்திற்கு ராணியின் உடல் எடுத்துச் செல்லப்படும்.

வின்ட்ஸ்டர் கோட்டையில் நடைபெறும் ஊர்வலத்தில் குடும்ப உறுப்பினர்கள்… மூத்த உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். பின்னர் தேவாலயத்தில் ராணியின் உடல் , தந்தை, அவரது தாயார் , அவரின் சகோதரி ஆகியோரின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்படும். இதனிடையே இலவரசர் பிலிப்பின் உடலையும் , மறைந்த ராணி உடல் அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அரச குடும்பத்தினர் வழக்கமாக திருமணம்,. ஞானஸ்தானம் போன்ற அனைத்திற்கும் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தை தேர்வு செய்வார்கள். இளவரசர் ஹேரி மேகன் திருமணம் இங்கு நடைபெற்றதுஎன்பது குறிப்பிடத்தக்கது. ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வு தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட இளைஞர் கைது

Wed Sep 14 , 2022
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சதீஷ் . இவர் டிடிசி என்ற கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் வந்ததாகவும் அவரிடம் காட்டிய போது பார்சல் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார். ஸ்கேன் செய்தபோது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கிண்டி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. தகவலை அடுத்து பார்சலை பிரித்தனர் . அதில் 100 […]

You May Like