fbpx

சிறுநீரகம் கெட்டு போவதற்கான காரணங்கள் இதுதான்….! ஆகவே இந்த விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்….!

நம்முடைய உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம் கெட்டுப் போவதற்கான காரணம் என்ன என்பதை பற்றி பலர் தெரியாமல் இருந்து வருகிறார்கள்.

நம்முடைய உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமான உறுப்பு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டுதல் பணியை செய்கின்றன. செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளும் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகிறது. ஆனால், இதய நோய்கள், சர்க்கரை நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் போல சிறுநீரக பிரச்சனைகளும் பயங்கரமானவை என்று சொல்லப்படுகிறது. இந்த சிறுநீரகப் பிரச்சனை எப்படி ஏற்படுகின்றன என்பதை நாம் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல் முறையில், பிரச்சனை ஏற்படலாம்.

இதன் காரணமாக, அந்த கழிவுகள் இரத்தத்தில் கலந்து, வாயின் வழியே துர்நாற்றம் வீசும். சிறுநீரகங்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.

இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகளின் விளைவு காரணமாக, அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி உள்ளிட்டவை உண்டாகலாம். சிறுநீரக செயல்பாடு குறைந்து காணப்பட்டால், இரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து, சோர்வு மற்றும் மூளை குறித்த பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். சிறுநீரகம் அமைந்திருக்கின்ற பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும். இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறி என்று கூறப்படுகிறது.

Next Post

வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! நோட் பண்ணிக்கோங்க..!!

Sun Aug 27 , 2023
செப்டம்பர் மாதத்தில் வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால், இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலை கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ளவும். அடுத்த மாதத்தில் பல திருவிழாக்கள் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பொதுத்துறை தவிர, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும். இந்தியாவில் இன்னும் சில நாட்களில் பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில் […]

You May Like