fbpx

Diwali 2024 : தீபாவளி நாளில் விளக்கேற்றும் போதும், விளக்கேற்றிய பிறகும் கவனிக்க வேண்டியவை என்னென்ன..?

அனைத்து மக்களாலும் சிறப்பாக  கொண்டாடப்படக்கூடிய மிக முக்கிய பண்டிகை தீபாவளி திருநாள். ஒரே மாதிரியாக கொண்டாடப்படும் சில பண்டிகைகள் நாட்டில் பல்வேறு இடங்களில், அந்த பகுதிக்கு ஏற்ப பல பெயர்களில் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த தீபாவளி பண்டிகை மட்டும் இந்த ஒரே பெயரில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்தாண்டு அக்டோபர் 31 ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். வாஸ்து சாஸ்திரப் படி, தீபாவளி தினத்தன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. விளக்குகள் நம்முடைய ஆன்மாவைக் குறிப்பதாக ஒரு நம்பிக்கை. தீபங்கள் ஏற்றுவதன் மூலம் வீட்டிலும் நம் மனதினலும் உள்ள எதிர்மறை விஷயங்களை அகற்றி, நேர்மறை எண்ணங்கள், நல்லவை வீட்டுக்குள்ளும் மனதுக்குள்ளும் நுழையும் என்பது ஐதீகம்.

தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்ய வேண்டியவை:

* முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும். துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.

* செல்வ வளம் பெருகி வீட்டில் மகிழ்ச்சி நிறைய விளக்கை  கிழக்கு அல்லது வடகிழக்கு பார்த்தபடி விளக்கேற்றலாம். இது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், விஷயங்களை அகற்றி, நலம், வளத்தை அதிகரிக்கச் செய்யும்.

*நேர்மறை ஆற்றல் வீட்டில் கிடைக்க பித்தளை அல்லது மண் விளக்குகளை வைக்க வேண்டும்.  

*பசு நெய் ஊற்றி ஏற்றப்படும் விளக்குகள் வீட்டுக்குள் மகிழ்ச்சியை கொண்டு வரும். நெய் விளக்கு ஏற்ற முடியாவிட்டால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய்யில் விளக்கு ஏற்றலாம்.

தீபாவளிக்கு விளக்கு ஏற்றும் போது செய்யக் கூடாதவை:

* தீபாவளிக்கு விளக்கு ஏற்றிய பிறகு, நாம் பயன்படுத்திய திரிகளை எல்லாம் ஒரு கிண்ணத்தில் போட்டு வைக்க  வேண்டும்.

* பிறகு சில நாட்கள் கழித்து நம்முடைய வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் எல்லோரையும் வரவழைத்து, கிழக்கு பார்த்து உட்கார சொல்லி சேகரித்த எல்லா திரியையும் போட்டு சுற்றி போட வேண்டும். 

* பிறகு வாசலில் வைத்து எரித்து விட வேண்டும். இப்படி நம் செய்யும் போது, நம்மை பிடித்த பீடை, துஷ்ட சக்திகள் எதிர்மறை ஆற்றல்எல்லாமே தீயிலிருந்து எரிந்து போயிடும்.

Read more ; B.Com முடித்த நபர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… தமிழக அரசு அறிவிப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்

English Summary

What are the things to be observed during and after lighting the lights on the day of Diwali..?

Next Post

இந்திய - சீன எல்லையில் தீபாவளி கோலாகலம்!. இருநாட்டு வீரர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டாட்டம்!

Thu Oct 31 , 2024
Eastern Ladakh disengagement complete; India, China to exchange sweets on Diwali

You May Like