fbpx

என்னது?… முழங்கால் வரை தேங்காய் எண்ணெய் தடவினால் டெங்கு காய்ச்சல் வராதா?… உண்மை என்ன?

மிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. ‘ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்’ என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். அந்தவகையில், நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த கிருமிநாசினி (ஆன்டிசெப்டிக்). மேலும் டெங்கு கொசுக்களால் முழங்கால் உயரத்துக்கு மேல் பறக்க முடியாது’ என்று கூறப்பட்டிருந்த புகைப்படும் ஒன்று வாட்ஸ் அப்பில் வைரலானது. 

தேங்காய் எண்ணெய் கொசுக்களை விரட்டும் என்று சித்த மருத்துவத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதேபோல் அது கொசுக்களை விரட்டும் தன்மை படைத்ததாக அறிவியல்பூர்வமாக இதுவரை எந்த ஆய்வுகளிலும்  நிரூபிக்கப்படவில்லை. நாம் சுவாசிக்கும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு கொசுக்களை ஈர்க்கும் தன்மை படைத்தது. அதனுடன் நமது உடலில் இருந்து வெளியேறும் லாக்டிக் அமிலம், ஆப்தனால், யூரிக் அமிலம், ஃபேட்டி ஆசிட், வியர்வை ஆகியவை ஒன்றுசேரும்போது உருவாகும் ஒருவிதவாசனை கொசுக்களை அதிகம் ஈர்க்கும். அப்போது இந்த வாசனைப் பரவாமல் தடுத்துவிட்டால் கொசுக்கடியில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். அதற்காக வாசனையை மறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு டியோடரன்ட் பயன்படுத்தினால், கொசுக்கடி அதிகமாகுமே தவிர குறையாது.

கிராம்பு தைலம், ‘சிட்ரோனெல்லா’  என்ற வாசனைப்புல் தைலம், லெமன்கிராஸ் எண்ணெய் ஆகியவற்றுக்குக் கொசுக்களை விரட்டும் தன்மை உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெய்களின் வாசனைக் காற்றில் பரவும்படி அறைகளில் திறந்து வைத்தால், மனிதர்களிடம் இருந்து வரும் வாசனையை அது மறைத்துவிடும். இதனால் கொசுக்கள் மனிதர்களை அண்டாது. இவற்றில் ஏதாவது ஒரு எண்ணெய்யை சரிபாதி அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கள் கடிக்காது. கற்பூராதி என்ற தைலத்தை சிறிது எடுத்து கை,கால்களில் தேய்த்தாலும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

Kokila

Next Post

ஆஹா!... பாகுபலியும் தேவசேனாவும் சேர்ந்தாச்சு!... திருமணம், குழந்தைகளுடன் வைரலாகும் போட்டோஸ்!

Tue Oct 10 , 2023
 AI தொழில் நுட்பத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவை இணைத்து வெளியிடப்பட்டுள்ள திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா உலகில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா குறித்து காதல், திருமணம் பற்றி ஆண்டுக்கணக்கில் பல்வேறு கிசுகிசு தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.  இருவரும் பாகுபலி 1, பாகுபலி 2 படத்தில் நடித்திருந்தபோது திருமணம் குறித்து சுவாரசியமான செய்திகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இருப்பினும், பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஆகியோர் இன்னும் […]

You May Like