fbpx

‘அவர மாதிரி ஒருத்தர எடுக்காம’ – பாண்டிங் சொல்வதென்ன?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் அஸ்வினை எடுக்காததற்கு, தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மற்றும் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கை இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தியிருந்தனர். இதனால், 23 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் வார்னர் 43 ரன்களும், கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியிருந்தனர். மார்னஸ் லபுஷேன் 26 ரன்களில் அவுட்டாக, ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் இல்லாதது பெரிய தவறு” என்று தனது வருத்தத்தை பதிவுசெய்துள்ளார்.

இதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையின்போது பேசியதாவது (போட்டியின் மதிய உணவு இடைவேளையின்போது), “அஸ்வின் கைவிடப்பட்டது குறித்து முடிவெடுத்த பின்பு பேசப்படுகிறது. இதுபோன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு கேப்டனாக நீங்கள் டாஸ் போடுவதற்கு முன்பாக அணியை பற்றி ஒரு முடிவெடுப்பீர்கள். அந்த வகையில், இந்தியா 4 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது என்று முடிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு வருடங்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் அவர்கள் களமிறங்கி வெற்றிகளை பெற்றுள்ளனர். டெஸ்ட் போட்டிகளையும் வென்றுள்ளனர். ஆனால், என்னிடம் நீங்கள் கேட்டால், நான் கேப்டனாக வேறு மாதிரி யோசிப்பேன்… ஒவ்வொரு கேப்டனும் வெவ்வேறாக சிந்திப்பார்கள்… நானும், ரோகித் சர்மாவும் வித்தியாசமாக யோசிப்போம். நானாக இருந்தால் அஸ்வின் போன்ற தரமான ஒரு சுழற்பந்து வீச்சாளரை 11 பேர் கொண்ட அணியிலிருந்து தவிர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Maha

Next Post

விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..!! லியோ படத்தில் இணைவாரா இவர்???

Thu Jun 8 , 2023
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றியை குவித்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யும் இணைந்துள்ள படம் “லியோ”. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதால் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் லலித் […]

You May Like