fbpx

“அண்ணாமலைக்கு வேறு என்ன வேலை இருக்கு..” விஜய்யின் அரசியல் கொள்கை என்ன…? பிரகாஷ்ராஜ் காட்டம்…!

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் குறித்த பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமரின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது “பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த பிரதமர் எல்லா ஒதுக்கப்பட்ட மக்களுக்காக பேசியதை, திரித்து ஒரு இனம் (முஸ்லீம் இனம்) என பேசும்போது அவருடைய அஜெண்டா என்னெவென்று தெரிகிறது. இந்த வார்த்தையை வர தமிழ்நாட்டிலியோ, கர்நாடகாவிலோ பேச மாட்டார், ஏனென்றால் அந்த பருப்பு இங்கே வேகாது. ஒரு நாடு ஒரு மொழி ஒரு தர்மம் என இருக்கும் மன்னருக்கு இரு நாக்குகள், ஒவ்வொன்றும் ஒன்றை பேசுகிறது. இத தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் இதற்கு மக்களை தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

மேலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை என நிருபர் கேட்டதற்கு பதிலளித்த நடிகர் பிரகாஷ்ராஜ், திருடனை பற்றிய complaint இன்னொரு திருடன்கிட்ட கொடுப்பீர்களா என்றார்.

கர்நாடகாவில் இந்தமுறை சென்ற ஆண்டைப் போல் 26 சீட்டுகள் வாங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ” அப்பப்போ மக்களும் அறியாமையில் ஓட்டு போடுவார்கள். அதே கர்நாடகாவில் தான் இந்த முறை ஆட்சியை இழந்தது. தற்போது இருவர் இணைந்து வந்துள்ளனர். தேர்தலில் ஜெயிப்பது தோற்பது மக்கள் தான், அவர்களுடைய வாழ்க்கை தான், அவர்களுடைய எதிர்காலம் தான். சவுத் இந்திய இந்த முறை பாஜகவிற்கு பாடம் புகட்டும்” என்றார்.

தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருகிறது என்று தேஜஸ்வி சூர்யாவிற்கு ஆதரவாக பரப்புரையில் அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “அண்ணாமலை முதலில் கோயம்புத்தூரில் எவ்வளவு ஓட்டு வாங்குகிறார் என்று பார்ப்போம். அவரு சும்மா சுத்திகிட்டு இருப்பார். அவருக்கு என்ன வேலை இருக்கு. அவங்க எல்லாம் வித்துக்கிட்டவங்க, அவங்க அப்படி தான் பேசிட்டு இருப்பாங்க.

அவங்க அப்படி பேசலைன்னா தான் ஆச்சரியம். அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் ராமர் சிலையை வெச்சிக்கிட்டு… யாரு emergency exit சூரியாவைதானே சொல்றீங்க. emergency exit தமிழ்நாட்டில் ஓபன் பண்ணியாச்சு. காரனடாவிலும் மிகு விரைவில் ஓபன் பண்ணுவோம், சவுத் இந்தியாவிலும் ஓபன் பண்ணுவோம்” என்றார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார், நீங்க அதில் சேரப் போறீங்களா, இல்லை வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணைய போறீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “நான் மக்களோட நடிகன் மக்களுக்காகத்தான் பேசுவேன். விஜய் அவர்கள் இப்பொது தான் கட்சி தொடங்கி இருக்கிறார். அவருடைய கொள்கைகள் என்ன சிந்தனைகள் என்ன, கல்வியை பற்றி என்ன சொல்வார், மக்களை பற்றி என்ன சொல்வார் என எல்லாத்தையும் பார்த்து தான் அவரைப்பற்றி பேச வேண்டுமே தவிர அரசியலுக்கு ஏன் வரீங்க என்று கேட்கக்கூடாது, வறட்டும்..வாழ்க, நல்ல எண்ணத்தோட வந்துருக்காரு , எல்லாத்தையும் சம்பாதிச்சு சாதிச்சு மக்களுக்கு நல்லது செய்யணும்னு வந்துருக்காரு, அதுக்கு இன்னும் டைம் இருக்கு” என்று கூறினார்.

Kathir

Next Post

NBFC அதிக வருடாந்திர வருமானம் ரூ.1252.23 கோடியை எட்டியது...!

Wed Apr 24 , 2024
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்தின் (ஐஆர்இடிஏ) நாட்டின் மிகப்பெரிய தூய பசுமை நிதியுதவி நிறுவனமான என்பிஎப்சி அதிக வருடாந்திர லாபமான ரூ.1252.23 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டு 2022-23 ஐ விட 44.83% ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் குறிக்கிறது. நிறுவனம் அதன் நிகர வாராக்கடன் அளவை நிதியாண்டு 2023-24 இல் 0.99% ஆக வெற்றிகரமாக குறைத்துள்ளது, இது நிதியாண்டு 2022-23 இல் 1.66% ஆக இருந்தது, இது […]

You May Like