fbpx

ரோஜா ஆபாச பட விவகாரம்.! விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?… ஆதரவாக குரல் கொடுத்த ராஜமாதா!

ரோஜா ஆபாச படங்களில் நடித்தவர் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய தெலுங்கு தேசம் கட்சி பண்டாரு சத்யநாராயணாவிற்கு எதிராக பிரபல நடிகைகள் குஷ்பு, ராதிகாவை தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனும் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் சுற்றுலாத்துறை அமைச்சராக நடிகை ரோஜா உள்ளார். இந்த நிலையில், ரோஜா ரோஜா ரெக்கார்டு டான்ஸ் ஆடியவர் என்றும், அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்றும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசிய கருத்து சர்ச்சையாகியுள்ளது. கட்சி ரீதியாக விமர்சிக்கிறேன் என்ற பெயரில் ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து முன்னாள் அமைச்சர் பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேட்டி அளித்தார். நான் படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி என்னை சித்திரவதை செய்கின்றனர். சட்டசபையிலும் வீடியோக்கள் எல்லாம் காட்டப்பட்டது. ஆனால், அந்த வீடியோக்களில் இருப்பது நான் தான் என்று நிரூபிக்கப்படவில்லை என்று கூறினார் ரோஜா. இதையடுத்து, அவதூறாக பேசிய வழக்கில் பண்டாரு சத்தியநாராயண மூர்த்தியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

மதிப்பிற்குரிய அமைச்சரும், நடிகையுமான ரோஜாவுக்காக நான் ஆதரவாக இருப்பேன் என நடிகை ராதிகா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், “ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்து பகிரப்பட்டு வருகிறது. அது மிகவும் வருத்தமளிக்கிறது. அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பெண்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் அரசியலிலும் ஒரு பங்காக உள்ளனர். சமூகத்தின் ஒற்றுமையில் பெண்களும் ஒரு தூணாக உள்ளனர். இந்த நிலையில் பெண் குறித்த அவதூறான அரசியல் கருத்து அசிங்கமாக உள்ளது. இந்தியாவில் பெண்களை பாரத மாதாவாக பார்க்கும் நிலையில் இதுபோன்ற அவதூறான விமர்சனங்கள் அசிங்கமாக உள்ளது” என்றார்.

ரோஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என கடுமையாக பதிலடி கொடுத்துள்ள ராதிகா, பெண்களை விபச்சாரி என்று சொன்னாலோ, ப்ளூ பிலிமில் நடித்திருக்கிறார் என்று அவரது கேரக்டரை அசிங்கப்படுத்தினால் பெண்கள் பயந்து விடுவார்கள் என்று நினைத்தீர்களா? நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்று விட்டு விளாசியுள்ளார் ராதிகா. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ராதிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, நடிகை குஷ்பு சுந்தர், பண்டாருவின் பெண் வெறுப்பு மனப்பான்மையைக் கண்டித்து பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரோஜாவுக்கு ஆதரவாக தான் தோழியாக இருந்து வரவில்லை என்றும், ஒரு பெண்ணாக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை அவருக்காக போராடுவேன் என்றும் கூறியிருந்தார்.

ராதிகாவை தொடர்ந்து அமைச்சர் ரோஜாவுக்கு ரம்யா கிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவதூறு கருத்துகளை தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயண மூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Kokila

Next Post

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்..!! தமிழர்களின் நிலைமை என்ன..? அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரபரப்பு பேட்டி..!!

Sun Oct 8 , 2023
இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் போர் மூளும் சூழலில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இஸ்ரேல்-பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். அதனடிப்படையில், […]

You May Like