ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள நாவலப்பிட்டியில் குமார தேசிய பாடசாலையில் 10 ஆம் வகுப்பு பயிலும் தேவிந்திர என்ற 15 வயது மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மதியம் நாவலப்பிட்டியில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தேவிந்திர, தனது வீட்டிற்கு அருகே பேருந்திலிருந்து இறங்க முற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கால் தடுமாறி தவறி விழுந்துள்ளார். விழுந்த போது, அங்கே இருக்கும் மண்மேட்டில் அவரது தலை மோதி பலத்த காயமடைந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பேருந்தை நிறுத்துவதற்கு முன்பே முன்பக்கத்திலிருந்து கீழே இறங்க முயன்ற போது மாணவர் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்து குறித்து பேருந்து இயக்குனரான சாரதி மீது சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மேலும் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டியில் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.