டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் அம்மாநில முதல்வருமான கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, ஆம் ஆத்மி தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கில் இதுவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மாஜி துணை முதல்வர் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் ஆபத்தில் உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி கவலை தெரிவித்துள்ளார்.
தீவிர சர்க்கரை நோய் உள்ள நிலையில், தொடர்ந்து 24 மணி நேர பொதுசேவையில் ஈடுபட்ட அவரின் உடல் எடை, கைதுக்கு பின் 4.5 கிலோ குறைந்துள்ளதாக கூறினார். முன்னதாக அவருக்கு சர்க்கரை அளவு குறைந்ததாகவும், சிறையில் நேற்று அதற்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Read More : பிஎஃப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! இனி அந்த டென்ஷன் வேண்டாம்..!!