பிஎஃப் பயனர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடியாக வந்த மாற்றம்..!! இனி அந்த டென்ஷன் வேண்டாம்..!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் மக்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையிலான புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஊழியரின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் 12 சதவீதமும் நிறுவனத்தின் சார்பில் இருந்து 12 சதவீதமும் செலுத்தப்படுகிறது. இது ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒரு ஊழியர் தான் முன்னர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விலகி புதிய நிறுவனத்திற்கு மாறும்போது, தனது இபிஎப் கணக்கை மாற்றுவதற்கு ஊழியர் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். பிறகு உள்ள வழிமுறைகளை பின்பற்றி ஊழியரின் இருப்பு தொகை புதிய கணக்கிற்கு மாற்றப்படும்.

ஆனால், தற்போது புதிய நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து ஊழியர் பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாறும்போது அவரது இருப்பு தொகை தானாகவே புதிய கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். இதற்காக விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை.

இந்த புதிய விதியானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இபிஎப் பயனர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுமா என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்களை EPFO வாரியம் இன்னும் வெளியிடவில்லை.

Read More : முடிவுக்கு வரும் மன்மோகன் சிங்கின் அரசியல் சகாப்தம்..!! இன்றுடன் ஓய்வு..!!

Chella

Next Post

நிலநடுக்கத்தால் 4 பேர் பலி!… 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்! 25 ஆண்டுகளில் இல்லாத பயங்கரம்!…

Wed Apr 3 , 2024
taiwan Earthquake: தைவான் தீவின் கிழக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தைவானின் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தைவான் நாட்டில் ஹூவாலியன் நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக பல கட்டடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, 1999 ஆம் ஆண்டு 7.2 என்ற அளவில் Nantou […]

You May Like