fbpx

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூருக்கு என்ன ஆச்சு..? சுருண்டு விழுந்ததால் பரபரப்பு..!! வைரல் வீடியோ..!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதை அடுத்து, தற்போது அவர் தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜான்வி கபூர் கிரிக்கெட் வீராங்கனை வேடத்தில் நடித்த ‘மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மகி’ என்ற திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்காக ஜான்வி கபூர் நாடு முழுவதும் ப்ரமோஷன் சென்று வருகிறார்.

மேலும், இப்படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடிப்பதற்காக ரொம்ப கஷ்டப்பட்டதாகவும், 2 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி செய்ததாகவும் முதலில் பந்தை தன்னால் பேட்டால் அடிக்க முடியவில்லை என்றும் பிறகு பல சவால்களை சந்தித்து பேட்டிங் செய்ய பழகிக்கொண்டதாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். அந்த வீடியோவில், அவர் பேட்டிங் செய்தபோது திடீரென தோள்பட்டை வலி ஏற்பட்டதால் சுருண்டு விழுந்த காட்சியும், பின்னர் மருத்துவர் அவருக்கு முதலுதவி செய்யும் காட்சியும் உள்ளது. இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து அவர் கிரிக்கெட் வீராங்கனை கேரக்டரில் நடித்துள்ளதை அடுத்து இப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : Cyclone | நாளை உருவாகிறது புயல்..!! தமிழ்நாட்டில் மழை எப்படி இருக்கும்..? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

English Summary

Jhanvi Kapoor, daughter of late actress Sridevi, has been acting in Bollywood films for the past few years.

Chella

Next Post

Trisha: '3 மாதத்தில் முறிந்த நிச்சயதார்த்தம்' த்ரிஷாவை சிங்கிள் லேடியாக்கிய அந்த சம்பவம்! இணையத்தில் வைரலாகும் பழைய போட்டோஸ்..!

Fri May 24 , 2024
கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிக்கும் நடிகை த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் 3 மாதங்களில் முறிந்த நிலையில், அந்த புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரசாந்த் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளிவந்த ஜோடி படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இவர் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் லேசா லேசா, இருப்பினும் அப்படம் வெளியாக தாமதம் ஆனதால் அமீர் இயக்கத்தில் சூர்யா […]

You May Like