சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபேர் பிரைஸ் என்ற பல்பொருள் அங்காடியில் இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தம்பதியரை அங்கிருந்து ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கப்பட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இந்திய தம்பதி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில் அவர் வருகின்ற வாரத்திற்கான மளிகை பொருட்களை வாங்குவதற்காக அருகில் இருந்த ஃபேர் பிரைஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றோம்.
அப்போது என்னுடைய கணவர் ஜகபர் நோன்பு திறப்பதற்காக வைத்திருந்த இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அந்த கடையின் ஊழியர் ஒருவர் “இது இந்தியர்களுக்கு இல்லை, இது இந்தியர்களுக்கு இல்லை” என திரும்பத் திரும்ப சொல்லி எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றார் எனது கணவர் அமைதியாக நின்று அந்த நபரிடம் பொறுமையாக விளக்கம் கூறியும் அவர் கேட்பதாக இல்லை என்று பதிவிட்டுள்ள அந்த பெண் மதிப்பிற்குரிய பேர் பிரைஸ் நிர்வாகிகளே இது மிகவும் ஒரு நாகரீகம் அற்ற செயல். நாங்கள் அந்த இலவச உணவை எடுக்கக்கூட முயற்சிக்கவில்லை. அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை தான் படித்துக் கொண்டிருந்தோம். தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கும் உங்களது செயல் மிகவும் பாராட்டுக்குரியது. அதற்காக நீங்கள் எங்களிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மரியாதையற்ற முறையில் இருக்கிறது. உங்களுடைய அருமையான ஒரு முன்னெடுப்பை பாராட்டுவதற்கு நாங்கள் வந்தோம் ஆனால் உங்களது நிர்வாகியின் செயல் எங்கள் மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டது நாம் 2023 ல் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.