fbpx

கோடை காலத்தில் முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்..? கண்டிப்பா தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்..!!

கோடையில் முட்டை சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், மனதில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு முட்டைகளை சாப்பிடுகிறீர்கள்..? என்பது தான்.

முட்டையில் அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கோடைக்காலத்தில் உடலுக்குத் தகுந்தாற்போல் தினமும் ஒன்று அல்லது 2 முட்டைகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதுவும் வேக வைத்து அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.

முட்டையில் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் புரதங்கள் ஏராளமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும், ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. முட்டையில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தும். அதுபோல லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முட்டையில் உள்ளது.

இது கண்ணின் விழித்திரையில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, கண்புரை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. முட்டை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் நீங்கும். முட்டையில் அதிக அளவு புரதம் உள்ளதால், இது உங்கள் உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வரப்போகுது..!!

Chella

Next Post

BREAKING | குடிபோதையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது..!!

Mon May 13 , 2024
தமிழ் திரையுலகின் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் வேல்முருகன். தற்போது சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது வேல்முருகன் அதிகாரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பிரபல […]

You May Like