திரவ உணவிலிருந்து குழந்தை திட உணவுக்கு மாறும் போது எளிதாக தொண்டையில் வழுக்கி கொண்டு போகும் படி உணவு இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி என்ன கொடுக்கலாம் என்று தாய்மார்கள் நினைக்கும் போது முதல் சாய்ஸ் பிஸ்கட் தான் தேர்வு செய்கிறார்கள். வெதுவெதுப்பான நீரில் பிஸ்கட்டை முக்கி எடுத்து குழந்தையின் வாயில் வைத்தால் குழந்தை சப்புகொட்டி சாப்பிடும். குழந்தைகளை ஈர்க்கும் பல விதமான பிராண்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுப்பது நல்லதா? இவற்றை சாப்பிடுவதால் என்னென்ன உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதைப் பார்ப்போம்.
இந்த பிஸ்கட்கள் தயாரிப்பதில் பாமாயில் மற்றும் டால்டா பயன்படுத்தப்படுகின்றன. இது டிரான்ஸ் கொழுப்பை உருவாக்குகிறது. இது உடலில் அதிகமாக இருந்தால், இதய நோயை ஏற்படுத்துகிறது. பிஸ்கட்டுகளில் சர்க்கரை மட்டுமல்ல, உப்பையும் சேர்க்கிறார்கள். பிஸ்கட் கெட்டுப்போகாமல் இருக்கவும், சுவை நன்றாக இருக்கவும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக உப்பு சாப்பிட்டால் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகம். சுவை மற்றும் நிறத்திற்காக அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களும் தீங்கு விளைவிக்கும்.
பிஸ்கட் தயாரிப்பில் சர்க்கரை, சுக்ரோஸ், குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட் மற்றும் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மென்மையான பிஸ்கட்டுகளில் புரதம் அதிகம். ஆனால், இவை சர்க்கரை அளவை அதிகரிக்கும். நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிகமாக பிஸ்கட் சாப்பிடக்கூடாது.
பிஸ்கட்டுகளில் சோடியம் பைகார்பனேட் அதிகமாக உள்ளது. இது உடலில் அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எடையும் அதிகரிக்கும். சில பிஸ்கட்களில் கலோரிகள் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு கிரீம் பிஸ்கட்டில் குறைந்தது 40 கலோரிகள் உள்ளன. அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவது நல்லதல்ல. பலருக்கு தேநீர், காபி, பால் ஆகியவற்றுடன் பிஸ்கட் சாப்பிடும் பழக்கம் உள்ளது. குழந்தைகள் இதைச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.