கோவையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்திலும் முதல் பெண் ஓட்டுனராக பணியாற்றிய ஷர்மிளா நேற்று திடீரென்று தன்னுடைய வேலையை இழந்த நிலையில், அவருக்கு தற்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடமிருந்து அவருக்கு வேலை வாய்ப்பு குவிந்து வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் ஷர்மிளாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலமாக அழைத்து வேறு வேலை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார். இதை தவிர ஷர்மிளா அதற்கு பல்வேறு தனியார் பேருந்துகளில் இருந்தும் வேலை வாய்ப்பு வழங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு மறுபடியும் பேருந்து ஓட்டுவதற்கு வாய்ப்பு வழங்க மற்றொரு தனியார் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர் முன் வந்திருக்கிறார். இது தொடர்பாக சூலூர் சேர்ந்த கிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் முருகேசன் என்பவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது எப்போது வேண்டுமானாலும் இடையர்பாளையத்திலிருந்து உக்கடம் நோக்கி போகும் தனியார் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிய வாய்ப்பு வழங்குகிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வேலையில் சேர்ந்து கொள்ளலாம். அவிநாசி ரோடு இல்லை என்றால் என்ன திருச்சி ரோட்டில் ஷர்மிளா பேருந்தை இயக்கலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.