fbpx

என்னது UPI வேலை செய்யாதா..? HDFC வங்கி வாடிக்கையாளர்களே உஷார்..!

இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், யுபிஐ, கிரெடிட் கார்டு, நெஃப்ட், நெட்பேங்கிங் சர்வீஸ், ஆர்டிஜிஎஸ் மற்றும் ஐஎம்பிஎஸ் போன்ற சேவைகள் வரும் 12ஆம் தேதி வேலை செய்யாது என தெரிவித்துள்ளது. வரும் 12ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 4 மணி நேரம் இந்த பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் தங்களது வங்கியில் கணக்கு வைத்த்டிருப்போருக்கு யுபியை இயங்காது.

நீங்கள் HDFC மொபைல் பேங்கிங் பயன்பாடு, Gpay, WhatsApp Pay, Paytm அல்லது பிற மூன்றாம் தரப்பு யூபிஐ தளங்களைப் பயன்படுத்தினாலும், உங்கள் HDFC வங்கி UPI சேவை இயக்காது. இதனால் ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம், இதன் மூலம் அவசியமற்ற சிக்கல்களை தவிர்க்கவும், HDFC வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் முன்கூட்டியே திட்டமிட்டு அனைத்து முக்கியமான பரிவர்த்தனையைத் தீர்த்துக்கொள்வது சிறந்தது. இல்லையெனில் வங்கி ஏடிஎம் சேவையைப் பயன்படுத்தி பணம் பெற்று பேமெண்ட்-க்கு பயன்படுத்தலாம்.

UPI என்பது எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் உடனடியாகப் பணத்தை அனுப்பும் ஒரு அமைப்பாகும். இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்டது. UPI உதவியுடன், மொபைல் ஆப் மூலம் பணத்தை மாற்றலாம். UPI கட்டண முறைமையில், Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற செயலிகளைப் பயன்படுத்தி மொபைல் போன் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே பணம் உடனடியாகப் பரிமாற்றம் செய்யப்படும்.

Read more: இந்திய கடற்படையில் வேலை..!! மாதம் ரூ.69,100 வரை சம்பளம்..!! பிளஸ்2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

What if UPI is not working? HDFC Bank customers beware!

Next Post

Gold Rate: மீண்டும் ஜெட் வேகம்.. சவரனுக்கு ரூ.1,200 உயர்வு..!! இப்பவே வாங்கலாமா..?

Thu Apr 10 , 2025
The price of gold jewelry in Chennai rose by Rs. 1,200 per sovereign today.

You May Like